களு கங்கை ஆற்றைச் சுற்றி வெள்ள நிலை

0
176

இன்னும் சில மணி நேரங்களுக்குள் களு கங்கை ஆற்றைச் சுற்றிய பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, நீர்ப்பாசனத் திணைக்களம் பராமரித்து வரும் நீர்மட்ட அளவையியல் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த, கிரியெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட களு கங்கை வெள்ளப் பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் சிறிய அளவிலான வெள்ள நிலை உருவாகக்கூடும் என அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here