யசந்த கோதாகொட நியமனத்துக்கு அரசியல் அமைப்பு சபை அனுமதி

Date:

இலங்கையின் உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபை வழங்கியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அனுப்பியிருந்த பரிந்துரையை பரிசீலித்ததன் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் படி, நீதித்துறை சேவை ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்ததாக மூத்த நிலை வகிக்கும் நீதிபதியே நியமிக்கப்பட வேண்டும்.

அதன்படி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நீதிபதி யசந்த கோதாகொட பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்திருந்தார்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா ஓய்வு பெற்றதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காகவே யசந்த கோதாகொட நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமாவை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும்...

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு

பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில்...

தென்மேற்கு பருவமழை தொடக்கம்

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

ஆட்சியை கொடுத்தால் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பேன் – திலித்

தற்போதைய சூழ்நிலையிலேயே நாட்டை பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும், நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு...