நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை மீண்டும் நிலைபெற்றுள்ளதால் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
சில பகுதிகளில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
