குருவிட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்றுக்கிடையே இன்று (07) பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாவது, நேற்று (06) இரவு முதன்முறையாக இந்த பதற்றநிலை ஏற்பட்டதுடன், பின்னர் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகும்.
எனினும், இன்று காலை மீண்டும் கைதிகள் இடையே பதற்றம் உருவாகியுள்ளது. இதன்போது, கைதிகள் சிலர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கும் சேதம் விளைவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையிலும் நேற்று இரவு கைதிகள் சிலருக்கிடையே பதற்றநிலை ஏற்பட்டது. இதையடுத்து பொலிஸார், கலவரக் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை (STF) உடனடியாக அழைக்கப்பட்டதுடன், இன்று காலை நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
