ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக அகல உடற்பரப்பைக் கொண்ட விமானங்களை (Wide-body aircraft) கொள்வனவு செய்த விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சச் சம்பவம் தொடர்பில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தார்.
