சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம், 70 மில்லியன் ரூபாய் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
‘கிரிஷ்’ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிரிவர்தனவுக்கு எதிரான விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. குறித்த தொகை மூன்று சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாக விசாரணை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
