Airbus விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து CID தொடர்ந்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) வழங்கியது.
5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஒக்டோபர் 14-ஆம் திதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
எனினும் பிரபல இந்திய சொத்து மேம்பாட்டு நிறுவனமான ‘கிரிஷ்’ நிறுவனம் தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் லஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
