ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி கைது

0
34

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சியை அதுருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று இரவு பனாகொட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்து தொடர்பிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் தரப்பின் தகவலின்படி, குறித்த விபத்துடன் தொடர்புடைய சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here