நாடு முழுவதும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக மேல் மாகாணம், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலையும் காணப்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடலுக்கு அப்பாலான கடற்பகுதிகளிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும், பலத்த காற்றுடனும் காணப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
