பல்வேறு தரப்பினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் 2027 வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் இல்லை

0
15

கைவிடப்பட்ட கொடுப்பனவுகள், அதிகரிக்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் மற்றும் நியாயமற்ற முறையில் குறைக்கப்பட்ட கொடுப்பனவுகள் எனப் பல்வேறு தரப்பினரின் கொடுப்பனவுகள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்டாலும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அவை குறித்து கலந்துரையாடுவதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் உள்ளன. கைவிடப்பட்ட கொடுப்பனவுகள், அதிகரிக்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் மற்றும் நியாயமற்ற முறையில் குறைக்கப்பட்ட கொடுப்பனவுகள் எனப் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எனினும், கொடுப்பனவுகள் தொடர்பான கலந்துரையாடல்களை 2028ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலேயே முன்னெடுக்க வேண்டியுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அடிப்படைச் சம்பள அதிகரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு மேலதிகமாக கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான நிதி வசதி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here