‘கல் அரக்கு’ 2,250 ரூபாய் வரி – விலை 4,000 ரூபா

0
14

‘கல் அரக்கு’ எனப் பிரபலமாக அழைக்கப்படும் மதுபான போத்தல் ஒன்றை உற்பத்தி செய்வதற்கு சுமார் 1,750 ரூபாய் மட்டுமே செலவாகும் நிலையில், அரசாங்கம் அதற்கு 2,250 ரூபாய் வரியாக அறவிடுவதால் அதன் விலை 4,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வேதஆரச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று (19) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டவிரோத மதுபானமான கசிப்புப் பாவனையைத் தடுத்து, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக கல் அரக்கு மதுபான போத்தலின் விலையைக் குறைப்பதாகக் கூறினார்கள். ஆனால் தற்போது அதன் விலை 4,000 ரூபாயாக உள்ளது.

ஒரு போத்தலை உற்பத்தி செய்வதற்கு 1,750 ரூபாய் மட்டுமே செலவாகிறது. ஆனால் 2,250 ரூபாய் வரியாக அறவிடப்படுகிறது.

எமது மக்கள், குறிப்பாக மீனவர்கள், தற்போது கல் அரக்கைக் குடிப்பதில்லை; வரியைத்தான் குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியே ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். மக்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள். திறைசேரியில் மாத்திரம் பணத்தைக் குவித்து வைத்திருக்க வேண்டாம். மக்களால் உணவுகூட வாங்கி உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here