யாழ், பல்கலைக்கழக மோதல்: 21 மாணவர்கள் விளக்கமறியலில்

0
14

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் முகாமைத்துவ பீடங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (20) இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மூன்று மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here