டிசம்பர் 2ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் முக்கிய தீர்மானம்

0
14

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை, இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்களை மீளாய்வு செய்து, விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் (EFF) ஏழாவது கட்டத்தை அங்கீகரிப்பது தொடர்பான தீர்மானத்தை 2026 டிசம்பர் 2ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள், நிதி உத்தரவாதங்கள் மற்றும் தொடர்புடைய அளவுகோல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் முடிவைப் பொறுத்தே இலங்கைக்குக் கிடைக்கவுள்ள அடுத்தகட்ட நிதியுதவித் தவணை விடுவிக்கப்படுமா என்பது தீர்மானிக்கப்படும்.

இதற்கு முன்னதாக, இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் பணியாளர் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here