கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தடை

Date:

கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொல்கசோவிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் ஒன்று கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிபொருள் இறக்கும் சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. விசாரணையை அடுத்து, கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாகம் மறு அறிவித்தல் வரையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து எரிபொருளை வெளியிட மாட்டோம் என நிரூபித்துள்ளது.

நாசவேலைகள் இடம்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு...

தங்கம் விலை – இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன்...

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

மாலைதீவு ஜனாதிபதி முகமது முஹைதீனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார...

இ.தொ.கா 86 வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர்...