Thursday, March 28, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சாராம்சம் 31.01.2023

1.மின்மாற்றிகள் அழிக்கப்பட்டு வீடுகளுக்குள் விளக்குகள் ஏற்றப்படாத இருண்ட காலத்திலும் இந்நாட்டின் பிள்ளைகள் பரீட்சைக்கு தோற்றியதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

2.முறையான கடன் மறுசீரமைப்புப் பேச்சுக்கள் வெளிவருவதற்கு முன்னர் இலங்கையின் உள்ளூர் நாணயக் கடன் தொடர்பில் வெளிநாட்டுப் பத்திரதாரர்கள் அதிக தெளிவைக் கோருகின்றனர் – இலங்கையின் உள்நாட்டுக் கடன் குவியலை நிர்வகிப்பது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் என கடனளிப்பவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

3.சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அனுமதியின் பின்னர் நாட்டின் “உள்நாட்டு கடன் மேலாண்மை பற்றிய விரிவான கலந்துரையாடல்கள்” நடத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார் – வெளிநாட்டுக் கடன்கள் மாத்திரம் அல்ல, உள்நாட்டுப் பொறுப்புகள் நிறைவேற்றப்படும் என நந்தலால் வீரசிங்க முன்னர் வலியுறுத்தியிருந்தார் – கடந்த மாதம், Fitch Ratings நிறுவனம் மதிப்பீட்டை வழங்கியது. இதில் இலங்கையின் உள்ளூர் நாணயக் கடன் “இயல்புநிலை”க்கு மேல் 02 புள்ளிகளில் உள்ளது – எவ்வாறாயினும், மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியானது இன்னமும் அரசாங்கப் பத்திரங்களில் பெருமளவில் முதலீடு செய்வதன் மூலம் மக்களின் சேமிப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

4.மேல் மற்றும் தென் மாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து போதைப்பொருளுக்கு எதிராக 7 மணித்தியால நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், இதில் 60 போதைப்பொருள் வியாபாரிகள் உட்பட 285 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 01 கிலோ ஹெரோயின் மற்றும் 01 கிலோ சணல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

5.N.B.P.D.S.கருணாரத்னவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும் தற்போதைய மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் கே.பி.பெர்னாண்டோவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கும் அரசியலமைப்புச் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

6.சுற்றுலாத்துறையானது பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை உருவாக்க முடியும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன கூறுகிறார் – அதை மேலும் மேம்படுத்த “புதுமையான” நடவடிக்கைகளை எடுக்க பங்குதாரர்களை வலியுறுத்துகிறார் – மேலும் சுற்றுலாவை அறிமுகப்படுத்தவும் ஊக்குவிக்கவும் வெளிநாடுகளில் தூதரகங்கள் மற்றும் பிரதிநிதிகளின் வலையமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

7.புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக இந்திய அரசின் 100 மில்லியன் டொலர் கடனுதவியின் கீழ், கல்வி, மத மற்றும் அரசு கட்டிடங்கள் உட்பட 11,219 கட்டிடங்களில் மேற்கூரை சோலார் பேனல்கள் நிறுவப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்தார்.

8.இளைஞன் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஒத்திவைத்துள்ளது கொழும்பு மேல் நீதிமன்றம்.

9.உயர்தர மாணவர்களுக்கு அவர்களின் பரீட்சை காலத்தில் தொடர் மின்சாரம் வழங்குவது தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படாத இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார அமைச்சு ஆகியவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

10.கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டு தெரிவுக்குழுக்களுக்கும் உறுப்பினர்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.