குரங்குகளை பச்சையாக சாப்பிடுவதற்காகவே சீனாவுக்கு ஏற்றுமதி!

0
106

குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றை பச்சையாக சாப்பிடுவதற்காகவே சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது. இருப்பினும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, அதிக எண்ணிக்கையிலான வன விலங்குகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சட்ட விதிகள் எதுவும் இல்லை.

இந்தச் சட்டத்தின்படி, வனவிலங்குகளை விற்பனை செய்வதில் ஈடுபடக் கூடாது என்பதுடன் பணத்திற்காக விலங்குகளை ஏற்றுமதி செய்யவும் முடியாது.

வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வது அன்னிய செலாவணியை கொண்டு வர உதவாது. ஆனால், தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் மனைவி திரைமறைவில் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை பச்சையாக சாப்பிடும் சிறப்பு உணவு தயாரிக்கும் முறை சீனாவில் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவிலிருந்தும் அதிக அளவில் குரங்குகளுக்கான பதிவு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குரங்குகள் மனிதர்களின் உடல் அமைப்பைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. எனவே அவை மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும்.

குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த நயனக ரன்வெல்ல, நாட்டை நாசப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏற்றுமதி செய்ய தீர்மானம் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த குரங்குகளினால் உற்பத்தி பயிர்களில் பெரும் பங்கு அழிந்து வருகிறது. ஆனால் அவற்றை ஏற்றுமதி செய்வது இதற்கு ஒரு தீர்வாகாது. பயிர்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம், ஆனால் அரசாங்கத்தில் யாரும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here