சஜித்தின் வெற்றிக் கூட்டம் இன்று ஆரம்பம்

0
287

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (16) குருநாகலில் நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று மாலை 04.00 மணிக்கு குருநாகல் சத்தியவாடி மைதானத்தில் இந்த மக்கள் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், முன்னாள் உள்ளுராட்சி பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்த பொது பேரணியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here