இலங்கை மீன்பிடிக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சகோதரருமான மஹீல் சேனாரத்ன, லஞ்சம, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதிலும் மீன் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2010 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் இக்கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றிய இவர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரராவார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
