22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று சமர்ப்பிப்பு

Date:

அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியன இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

பாராளுமன்றத்தின் முக்கிய நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் இந்தச் சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சட்டமூலமொன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதன்பின்னர் எவரேனும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும். 

அதன்படி, உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கும். 

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயரும். 

நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

– பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்க்கட்சி கூறும் விடயங்களை தற்போதைய...

ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகன் கனிஷ்க சேனாநாயக்க காலமானார்

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகனான கனிஷ்க சேனாநாயக்க...

பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...