காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை – மட்டுப்படுத்தப்பட்டது

Date:

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் போக்குவரத்து தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் இந்த கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...