க்ளப் வசந்தாவின் கொலை தொடர்பாக 08.08.2024 அன்று மாலை 08.28 க்கு பின்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவென சந்தியில் பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தேக நபர் ஒருவரும் வாகனத்தை செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 32 வயதான நாகொட, காலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய சந்தேக நபர் 29 வயதுடைய அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.