லிமினி அனுராதபுரம் வருவது உறுதி ஆனால்,..

0
164

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான லிமினி வீரசிங்க ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் மேடையில் ஏறமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாமல் மற்றும் லிமினியின் திருமண ஆண்டு விழாவும் செப்டம்பர் 12ஆம் திகதியே இடம்பெறுவதால், அன்றைய தினம் அவர் அனுராதபுரத்தில் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனுராதபுர பேரணியின் மேடையில் தோன்றுவார் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய புதிய தகவல்களின்படி, அவர் அந்த மேடைக்கு வருகை தந்து மக்களிடம் உரையாற்ற மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here