நாட்டைக் கட்டியெழுப்புவது மக்களின் பொறுப்பு

0
155

அரசாங்கத்தால் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றும், நாட்டைக் கட்டியெழுப்புவது மக்களின் பொறுப்பு என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“முன்னர் எமது கட்சியின் ஆதரவாளர்கள், எமது செயற்பாட்டாளர்கள், எமது சகோதர சகோதரிகளுக்கு இருந்த பொறுப்பு கட்சியைக் கட்டியெழுப்புவதாகும். மக்கள் இயக்கத்தை உருவாக்குவது, தேசிய மக்கள் சக்தியை (NPP) கட்டியெழுப்புவது ஆகியவையே எமது பொறுப்பாக இருந்தன. அது அதிகாரத்தைப் பெறுவதற்கான பணியாக இருந்தது.

இப்போது நாம் அதிகாரத்தைப் பெற்றுள்ளோம். அப்படியானால் இப்போது எமக்கு இருக்கும் பொறுப்பு என்ன? கடந்த காலத்தில் அதிகாரத்தைப் பெறுவதற்காக நாம் கடுமையாக உழைத்து NPP-யைக் கட்டியெழுப்பியது போன்று, தற்போது அதே தைரியத்துடன் ஒன்றிணைந்து நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்திற்கு மட்டும் உரித்தான பணியல்ல. அரசாங்கத்தால் மட்டும் அதைச் செய்ய முடியாது. இது யாருடைய பொறுப்பு? இது நாட்டின் மக்களின் பொறுப்பு.

குறிப்பாக மாலிமா மீது நம்பிக்கை வைத்து, மாலிமாவுக்கு வாக்களித்த மக்களின் பொறுப்பாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பது அமைகிறது.”

டில்வின் சில்வா இந்தக் கருத்துக்களை நேற்று (06) பேருவளையில் நடைபெற்ற ‘எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நல்வாழ்வு’ என்ற மாபெரும் மக்கள் பேரணியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here