லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

Date:

நாட்டில் உள்ள இரண்டு பெரிய எரிவாயு விநியோகஸ்தர்களில் ஒன்றான லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பை இன்று புதன்கிழமை வெளியிடவுள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பில் உள்ள லிட்ரோ தலைமை அலுவலகத்தில் இது தொடர்பான அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் வெளியிடவுள்ளார்.

விலை திருத்த சூத்திரத்தின் அடிப்படையில் விலை திருத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலையை கருத்தில் கொண்டு, இந்த விலை திருத்தத்தின் போது, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...