வண்ணாத்துவில்லு வெடிபொருட்கள் விவகாரம் – இருவருக்கும் 19 வருட கடூழிய சிறை

0
19

புத்தளம், வண்ணாத்துவில்லு பகுதியில் உள்ள லெஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை களஞ்சியப்படுத்திய குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தின் விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அபு ஹனீபா மொஹமட் முசிப் மற்றும் அமீர் ஹம்சா மொஹமட் ஹம்சா ஆகிய இருவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வண்ணாத்துவில்லு பகுதியில், சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குறித்த தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குறித்த வழக்கில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இருவரும் நீதிமன்றில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here