டொலரில் பணம் செலுத்தினால் ,எரிபொருளை வழங்குவதற்கு தயார் -காஞ்சன விஜேசேகர

Date:

டொலரில் பணம் செலுத்தினால், எரிபொருள் தேவைப்படும் தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தயாராக இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் நிலவும் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும் எனவும், அதன் பின்னர் நாட்டிற்கு தொடர்ந்து விநியோகம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும், மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நீண்ட நாட்களுக்குப் பின் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...