அதிசொகுசு வாகனங்கள் இறக்குமதிக்கு 5 வருட தடை

Date:

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிசொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 5 வருடங்களுக்கு நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதியமைச்சின் கீழ் உள்ள பல வரி ஒழுங்குமுறை சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இணைந்துகொண்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“மோட்டார் வாகனங்கள் மீதான வரி பற்றி நான் பேச விரும்புகிறேன். இது சொகுசு வாகனங்களுக்கான வரியை அதிகரிப்பது பற்றியது. சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 4 முதல் 5 ஆண்டுகளுக்கு முழுமையாக நிறுத்துமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்டுக்கு சொகுசு கார்கள் தேவையில்லை. இந்நாட்டின் பொருளாதாரத்தின் படி இருக்கும் வாகனங்களே போதும். எனவே சொகுசு வாகனங்கள் இல்லாமல் குறைந்தது 5 வருடமாவது இந்த நாட்டை இயக்குங்கள். ஏனெனில் சொகுசு வாகனங்களுக்குச் செல்லும் அந்நியச் செலாவணி மிகப் பெரியது. அதன் காரணமாக, நமது வெளிநாட்டு சொத்துக்கள் குறைவதற்கு முக்கிய காரணம் சொகுசு வாகனங்கள்தான்” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...