2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி (VAT) தொடர்பான புதிய வரி பில் (Tax Invoice) வடிவமைப்பு மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தும் திகதியை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க உள்நாட்டு வருவாய் துறை தீர்மானித்துள்ளது.
அதன்படி, புதிய முறையை 2026 ஜூலை 01 வரை தள்ளிப் போடப்பட்டுள்ளது என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது.
2025 நவம்பர் 17 ஆம் திகதியிட்ட 2463/05 என்ற விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய விதிமுறை, VATக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் கட்டாயமாகும்.
