சர்வதேசத்தின் தலையீட்டுடன் செம்மணி மனித புதைக்குழிக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், அரசாங்கம் குற்றங்களை மூடிமறைப்பதை விடுத்து நடந்தவற்றை வெளிப்படுத்தி நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கவாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.







