– பிரதி பாதுகாப்பு அமைச்சர்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) சிறந்த அரசாங்கம் எதிர்க்கட்சியின் அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“அரசியல் ரீதியாக இருந்த ஆபத்துகளை ஒரு புறம் ஒதுக்கிவைத்துத்தான் இந்த உன்னத இயக்கத்துடன் நாங்கள் இணைந்தோம். நாங்கள் உருவாக்கிய இந்த சிறந்த, மக்கள் அரசாங்கத்தின் பலத்தைக் கொண்டு எதிர்க்கட்சிக்கு என்ன செய்திருக்கிறோம்? அவர்களை நாடாளுமன்றத்தில் உள்ள சில ஆசனங்களுக்கு கொண்டு சென்று சாய்த்து வைத்து, முத்திரையிட்டு முடித்துவிட்டோம். இனி அவர்களுக்கு அரசியல் இல்லை.”
தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற முப்படையினர் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட மாநாடு நேற்று (16) நடைபெற்றது.
இதில் உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
