கடத்தல், கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Date:

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்ரமணியம் ரவீந்திரநாத்தை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக, சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

பேராசிரியர் ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் உள்ள அதி பாதுகாப்பு வலயத்தில் வைத்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பிள்ளையான் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

பேராசிரியர் ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து, அவரது காணாமல் போனமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2006 ஆம் ஆண்டிலேயே விசாரணைகளை ஆரம்பித்தது. அந்த விசாரணைகளின்போது பேராசிரியர் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

எவ்வாறாயினும், சம்பவம் இடம்பெற்று சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின்னர், அது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

– பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்க்கட்சி கூறும் விடயங்களை தற்போதைய...

ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகன் கனிஷ்க சேனாநாயக்க காலமானார்

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகனான கனிஷ்க சேனாநாயக்க...

பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...