ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஷீரான் பாசிக் என்பவரை, இன்று கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களின் ஆலோசனையின் பேரில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான ரன்மல் கொடித்துவக்குவின் நேரடி மேற்பார்வையிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச வழிகாட்டுதலிலும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
