ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சது’ என அழைக்கப்படும் திமுது சதுரங்க, இன்று (18) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் அவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை கைது செய்வதற்காக சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது.
