முறைகேடாக சொத்து சேர்த்ததாக விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

0
12

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமைச்சராகப் பதவி வகித்தபோது, தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்ததன் மூலம் இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (08) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகள் மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் அழைப்பாணை பிறப்பித்தார்.

முறைப்பாட்டுத் தரப்பின் 31, 32 மற்றும் 33ஆம் இலக்க சாட்சிகளாகப் பெயரிடப்பட்டவர்களுக்கே இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here