லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணைத் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (09) முற்பகல் 9.00 மணிக்கு குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் கேள்வி எழுப்பி வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைவாகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
