களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது மனைவி காயமடைந்து சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
