நேற்று முன்தினம் (30) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் LNW க்கு தெரிவித்தார்.